அரியலூர் மாவட்டத்தில் பதற்றமான 90 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தேர்தல் அதிகாரி தகவல்


அரியலூர் மாவட்டத்தில் பதற்றமான 90 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 17 April 2019 11:00 PM GMT (Updated: 17 April 2019 7:48 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் பதற்றமான 90 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

அரியலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற பொது தேர்தல் இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்நிலையில் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரியலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கீழகாவட்டாங்குறிச்சி பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரியலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 297 வாக்குச்சாவடிகளில் 52 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 1 வாக்குச்சாவடி நெருக்கடியானது எனவும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 290 வாக்குச்சவாடி மையங்களில் 35 வாக்குச்சாவடி மைங்கள் பதற்றமானவை எனவும், 2 வாக்குச்சாவடி மைங்கள் நெருக்கடியானது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கண்ட 90 வாக்குச்சாவடி மையங்களில் சுமுகமான முறையில் தேர்தல் நடத்த ஏதுவாக மத்திய துணை ராணுவ படைவீரர்களுடன், கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகள் கேமராக்கள் மூலம் கண் காணிக்கப்படும். அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 587 வாக்குச்சாவடிகளில் 193 வாக்குச்சாவடிகளில் வெப் ஸ்டீரீமிங் கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு விவரங்கள் பார்வையிடப்படவுள்ளது என்றார்.

அப்போது அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள எல்லையை அறியும் வகையில் பெயிண்ட் மூலம் கோடு போடப் பட்டுள்ளது.

Next Story