மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூரில்வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு + "||" + Gummidipochi, Sriperumbudur Sending voting machines for polling stations

கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூரில்வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூரில்வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூரில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்டது கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி. கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாக்களை கொண்ட இந்த தொகுதியில் மொத்தம் 330 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் தொடர்பான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரண பொருட்களை ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்ட லாரிகள் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணி நடந்தது. கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி தலைமையில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான சுரேஷ்பாபு, தேர்தல் துணை தாசில்தார்கள் தாமோதரன், ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் இந்த பணிநடைபெற்றது.

மொத்தம் 26 லாரிகளில் 330 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரண பொருட்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர நாற்காலிகளையும், அதற்குரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் எடுத்துசென்றனர்.

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை 190 இடங்களில் மொத்தம் 330 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இத்தகைய 190 இடங்களில் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக 190 இரு சக்கர நாற்காலிகள் கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், கும்மிடிப்பூண்டி தாசில்தாருமான சுரேஷ்பாபு தெரிவித்தார்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட ஸ்ரீபெரும்புதூர் சட்ட மன்ற தொகுதியில் 352 வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்த 827 வாக்குபதிவு எந்திரங்கள் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைக்கபட்டிருந்தது. இவை அனைத்தும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு 25 வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது

வாக்குப்பதிவின்போது ஊனமுற்றோர் சிரமம் இன்றி வாக்களிக்க வசதியாக ஸ்ரீபெரும்புதூர் சட்ட மன்ற தொகுதியில் உள்ள 352 வாக்குமையங்களுக்கு ஊனமுற்றோர் பயன்படுத்துவதற்கு வசதியாக 178 இரு சக்கர நாற்காலிகள் கொண்டு செல்லப்பட்டது.