மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் பணிபுரிய 5,016 பேருக்கு ஆணை தேர்தல் அதிகாரி அன்பழகன் தகவல் + "||" + 5,016 people working for polling in Karur district

கரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் பணிபுரிய 5,016 பேருக்கு ஆணை தேர்தல் அதிகாரி அன்பழகன் தகவல்

கரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் பணிபுரிய 5,016 பேருக்கு ஆணை தேர்தல் அதிகாரி அன்பழகன் தகவல்
கரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி பணிக்காக 5,016 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அன்பழகன் தெரிவித்து உள்ளார்.
கரூர்,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு தேர்தலையொட்டி 96 வகையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து புலியூரில் உள்ள தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவிற்குத்தேவையான பொருட்கள் வந்துள்ளதா என்பது குறித்தும் தேர்தல் நடத்தும் அதிகாரி ஆய்வு செய்தார்.


அதன் பின்னர் அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அனைத்து மகளிர் வாக்குச்சாவடி மையமும், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு நான்கு மாதிரி வாக்குச்சாவடி மையமும் என கரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,031 வாக்குச்சாவடிகள் மையங்க்உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் 4,181 நபர்கள் பணிபுரிய உள்ளார்கள். இதுதவிர கூடுதலாக 835 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் என மொத்தம் 5,016 நபர்களுக்கு (கரூர் நாடாளுமன்ற தொகுதி முழுவதும் 8000 நபர்கள் தேர்தல்பணியாற்றவுள்ளனர்) பணி ஒதுக்கீடு செய்வதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் முழுவதும், ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 29 இன்ஸ்பெக்டர்கள், 125 சப்-இன்ஸ்பெக்டர்கள், 668 போலீசார், பதற்றமான வாக்குச்சாவடிகளில் இந்திய துணை ராணுவப்படையினர் உள்பட மொத்தம் 1,751 பேர் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய சட்டமன்றத்தொகுதிகளுக்கு மொத்தம் 3,439 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் 1,552 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 1,775 வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நாளை (இன்று) காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையினை காட்டி வாக்களிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ள இதர 11 வகையான புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களைக்காட்டி வாக்களிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சரவணமூர்த்தி (கரூர்), மல்லிகா (கிருஷ்ணராயபுரம்), துணை போலீஸ் சூப்பிரண்டு கும்பராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 2030-ல் இந்தியாவின் மின் உற்பத்தி இரு மடங்காக உயரும் பொறியாளர்கள் தேசிய மாநாட்டில் என்.எல்.சி. இயக்குனர் தகவல்
2030-ல் இந்தியாவின் மின் உற்பத்தி இரு மடங்காக உயரும் என்று உற்பத்தி பொறியாளர் கள் தேசிய மாநாட்டில் என்.எல்.சி. இயக்குனர் கூறினார்.
2. 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உப்பு, சர்க்கரை பொட்டலங்கள் கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி முதல் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வீடு, வீடாக சென்று வாய்வழி உப்பு, சர்க்கரை பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
3. திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆனந்த் தகவல்
திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார்.
4. முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேருவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாந்தா கூறினார்.
5. கட்டிட உரிமையாளர்கள் வாடகை ஒப்பந்தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் கலெக்டர் தகவல்
வாடகைதாரர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் வாடகை ஒப்பந்தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.