மாவட்ட செய்திகள்

தென்காசியில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு + "||" + From Tenkasi Voting machines are sent to the polling stations

தென்காசியில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

தென்காசியில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
தென்காசியில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தென்காசி,

நாடாளுமன்ற தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள தென்காசி சட்டமன்ற தொகுதிக்கான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதனை நேற்று அதிகாரிகள் வாக்குச்சாவடிகளுக்கு லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

தென்காசி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 326 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், பதிவான வாக்குகளை சரிபார்க்கும் எந்திரம் ஆகியவை அனுப்பப்பட்டன.

இதுதவிர 66 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கூடுதலாக தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஏதாவது எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் மாற்று எந்திரங்களை கொண்டு செல்வதற்காக இவைகள் வைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில், தென்காசி உதவி கலெக்டர் சவுந்தர்ராஜ், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹென்றி பீட்டர், தாசில்தார் சங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 271 வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரம் உள்ளிட்ட பொருட்களை வாசுதேவநல்லூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கீதா, சிவகிரி தாசில்தார், கிருஷ்ணவேல் மற்றும் அதிகாரிகள் லாரியில் அனுப்பி வைத்தனர்.