மாவட்ட செய்திகள்

ராமநத்தம் அருகே பெண், தூக்குப்போட்டு தற்கொலை - மாமியார் திட்டியதால் விபரீத முடிவு + "||" + Near Ramanatham Woman, suicide by hanging

ராமநத்தம் அருகே பெண், தூக்குப்போட்டு தற்கொலை - மாமியார் திட்டியதால் விபரீத முடிவு

ராமநத்தம் அருகே பெண், தூக்குப்போட்டு தற்கொலை - மாமியார் திட்டியதால் விபரீத முடிவு
ராமநத்தம் அருகே மாமியார் திட்டியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராமநத்தம்,

ராமநத்தம் அருகே உள்ள கொரக்கை கிராமத்தை சேர்ந்தவர் மருதையன். இவருடைய மனைவி ராசாத்தி(வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மருதையன் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராசாத்தி, தனது குழந்தைகளை அடித்ததாக தெரிகிறது. இதைபார்த்த மருதையனின் தாய் லதா, ராசாத்திவிடம் ஏன் குழந்தைகளை அடிக்கிறாய் என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ராசாத்தியை லதா திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராசாத்தி, வீட்டுக்குள் சென்று அங்குள்ள அறையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராசாத்தியின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கடலூர் முதுநகர் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வரதட்சணை கொடுமை காரணமா? சப்-கலெக்டர் விசாரணை
கடலூர் முதுநகர் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
2. மடிகேரியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை அதிர்ச்சியில் கணவரும் உயிரை மாய்த்துக்கொண்டார்
மடிகேரியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவரும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
3. எல்லாபுரம் அருகே கணவர் திட்டியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
எல்லாபுரம் அருகே கணவர் திட்டியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.