வாக்காளர்களுக்கு கொடுக்காமல் சாலையோரத்தில் வீசப்பட்ட ‘பூத் சிலிப்’புகள்
திருவொற்றியூரில் வாக்காளர்களுக்கு வழங்காமல் ‘பூத் சிலிப்’புகள் சாலையில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ‘பூத் சிலிப்’புகள் வழங்கப்பட்டு வந்தது. இதனை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வீடுவீடாக சென்று வழங்கி வந்தனர். ஆனால் பல இடங்களில் வாக்காளர்களுக்கு முறையாக ‘பூத் சிலிப்’புகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று தேர்தல் நடந்தது. இதற்கிடையே திருவொற்றியூர் ஜீவன்லால் நகரில் உள்ள சாலையோரத்தில் கட்டுகட்டாக ‘பூத் சிலிப்’புகள் வீசப்பட்டு கிடந்தது. வாக்குச்சாவடிக்கு நேற்று காலை ஓட்டுப்போட வேறு ஆவணங்களுடன் சென்ற வாக்காளர்கள் சாலையோரத்தில் குப்பையுடன் கிடந்த ‘பூத் சிலிப்’புகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் தங்களது ‘பூத் சிலிப்’ உள்ளதா? என்று போட்டிபோட்டு எடுத்து பார்த்தனர்.
மேலும் காற்று வீசியதால் அவை பறந்தன. அந்த ‘பூத் சிலிப்’புகள் அனைத்தும் அப்பகுதி வாக்காளர்களுடையது என்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பூத் சிலிப் எப்போது வரும் என்று நாங்கள் காத்திருந்தோம். ஆனால் அதனை வினியோகம் செய்த ஊழியர்கள் சாலையோரத்தில் வீசி உள்ளனர். இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

Related Tags :
Next Story