தீ தடுப்பு சாதனம் இன்றி இயங்கி வரும் தனியார் மருத்துவமனை, ஓட்டல்களுக்கு சீல் தானே மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தீ தடுப்பு சாதனம் இன்றி இயங்கி வரும் தனியார் மருத்துவமனைகள், ஓட்டல்களுக்கு சீல் வைக்கும்படி தானே மாநகராட்சிக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
தானே,
தீ தடுப்பு சாதனம் இன்றி இயங்கி வரும் தனியார் மருத்துவமனைகள், ஓட்டல்களுக்கு சீல் வைக்கும்படி தானே மாநகராட்சிக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மனு தாக்கல்
தானேயில் செயல்பட்டு வரும் கேளிக்கை விடுதிகள் மற்றும் ஓட்டல்கள், தனியார் மருத்துவமனைகளில் முறையான தீ தடுப்பு சாதனம் வைத்து அதற்கான சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணைக்கு பிறகு ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சீல் வைக்க உத்தரவு
தானேயில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகள், கேளிக்கை விடுதி, ஓட்டல்களில் முறையான தீ தடுப்பு சாதனம் வைத்து தடையில்லா சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழ் இல்லாமல் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை, கிளினிக்குகள் மற்றும் ஓட்டல்களுக்கு மாநகராட்சி சீல் வைக்கலாம்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story