மாவட்ட செய்திகள்

விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை; சினிமா தயாரிப்பாளர் கைது + "||" + Airborne harassment; Cinema producer arrested

விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை; சினிமா தயாரிப்பாளர் கைது

விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை; சினிமா தயாரிப்பாளர் கைது
விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
மும்பை, 

விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

சினிமாவில் வாய்ப்பு

மும்பை வெர்சோவாவில் வசித்து வருபவர் நான்சி.விமான பணிப்பெண். இவரது சொந்த ஊர் டெல்லி ஆகும். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு கொங்கனி மொழிப்பட தயாரிப்பாளரான நவிமும்பை வாஷியை சேர்ந்த அனிகேத்(வயது32) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது நான்சி தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தரும்படி தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு அனிகேத் வாய்ப்பு தருவதாக கூறி, நான்சிக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

இதனால் நான்சி கடந்த ஆண்டு அனிகேத் உடனான தொடர்பை துண்டித்தார்.

படத்தயாரிப்பாளர் கைது

இந்தநிலையில் அனிகேத் வெர்சோவாவில் உள்ள நான்சியின் வீட்டிற்கு சென்று மீண்டும் தொல்லை கொடுத்து உள்ளார். இதுபோல சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் நான்சி வீட்டில் தனியாக இருந்தபோது, அனிகேத் குடிபோதையில் அவரது வீட்டுக்கு சென்று கதவை தட்டி உள்ளார். நான்சி கதவை திறக்காததால் ஆத்திரம் அடைந்த அவர், கதவை உடைக்க முயன்றார். இதனால் பயந்து போன நான்சி சம்பவம் குறித்து வெர்சோவா போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இந்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று அனிகேத்தை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை