அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் 76.65 சதவீதம் வாக்குகள் பதிவு சட்டமன்ற தொகுதி வாரியாக அறிவிப்பு


அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் 76.65 சதவீதம் வாக்குகள் பதிவு சட்டமன்ற தொகுதி வாரியாக அறிவிப்பு
x
தினத்தந்தி 19 April 2019 10:15 PM GMT (Updated: 19 April 2019 1:57 PM GMT)

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் 76.65 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் சோளிங்கர், குடியாத்தம் (தனி), ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் 7 மணிக்கு பிறகும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இறுதியாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் 76.65 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 14,94,929 பேர். ஆண்கள் 7,31,263. பெண்கள் 7,63,587. மூன்றாம் பாலினத்தினர் 79 பேர். பதிவானவை 11,45,831. ஆண்கள் 5,68,549. பெண்கள் 5,77,268. மூன்றாம்பாலினத்தினர் 14.

அரக்கோணம் நாடளுமன்ற தொகுதியில் உள்ள திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய சட்டமன்ற தொகுதி வாரியாக பதிவான வாக்குகள், சதவீதம் வருமாறு:–

திருத்தணி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,76,297. ஆண்கள் 1,35,952, பெண்கள் 1,40,318. மூன்றாம் பாலினத்தினர் 27. பதிவான வாக்குகள் 2,18,700. ஆண்கள்–1,09,431, பெண்கள் 1,09,268. மூன்றாம் பாலினத்தினர் 1. இது 79.15 சதவீதம்.

அரக்கோணம் தொகுதி மொத்த வாக்காளர்கள் 2,16,703. ஆண்கள் 1,06,134, பெண்கள் 1,10,553. மூன்றாம் பாலினத்தினர் 16. பதிவானவை 1,64,899. ஆண்கள் 82,393, பெண்கள் 82,495, மூன்றாம் பாலினத்தினர் 11. இது 76.09 சதவீதம்.

சோளிங்கர் தொகுதி மொத்த வாக்காளர்கள் 2,61,537. ஆண்கள் 1,29,177. பெண்கள் 1,32,358. மூன்றாம் பாலினத்தினர் 2. பதிவானவை 1,95,197. ஆண்கள் 96,516, பெண்கள் 98,680. மூன்றாம் பாலினத்தினர் 1. இது 74.63 சதவீதமாகும்.

காட்பாடி தொகுதி மொத்த வாக்காளர்கள் 2,36,910. ஆண்கள் 1,14,876. பெண்கள் 1,22,008. மூன்றாம் பாலினத்தினர் 26. பதிவான வாக்குகள் 1,72,008. ஆண்கள் 84,080. பெண்கள் 87,923. இது 72.60 சதவீதம்.

ராணிப்பேட்டை மொத்த வாக்காளர்கள் 2,53,642. ஆண்கள் 1,23,028. பெண்கள் 1,30,609. மூன்றாம் பாலினத்தினர் 5. பதிவான வாக்குகள் 1,93,916. ஆண்கள் 96,808. பெண்கள் 97,107. மூன்றாம் பாலினத்தினர் 1. இது 76.45 சதவீதம்.

ஆற்காடு மொத்த வாக்காளர்கள் 2,49,840. ஆண்கள் 1,22,096. பெண்கள் 1,27,741. மூன்றம் பாலினத்தினர் 3. பதிவானவை 2,01,111. ஆண்கள் 99,321, பெண்கள் 1,01,790. இது 80.50 சதவீதம்.


Next Story