நெல்லையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

நெல்லையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நெல்லை,
நெல்லையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்
‘பத்மஸ்ரீ’ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 6-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நெல்லை ‘தினத்தந்தி’ அலுவலகத்தில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. ‘தினத்தந்தி’ ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க.
அ.தி.மு.க.வினர் அமைப்பு செயலாளரும், நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான மனோஜ்பாண்டியன் மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் விஜிலாசத்யானந்த் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. தர்மலிங்கம், மாநில அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், மாநகர் மாவட்ட அவைதலைவர் பரணிசங்கரலிங்கம், பகுதி செயலாளர்கள் தச்சை மாதவன், மோகன், ஹயாத், ஒன்றிய செயலாளர் கங்கைமுருகன், பகுதி பொருளாளர் முகமதுஅலி, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாணவர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ரவிஆறுமுகம், நிர்வாகிகள் டி.பி.எம். முகைதீன்ஷா, நயினா முத்துராஜ், வண்ணைகணேசன், சுந்தரம், திருத்து சின்னத்துரை, சிந்துமுருகன், கே.டி.குருசாமி, மனோகரன், சங்கர், வக்கீல் சலிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கிளை செயலாளர் சொக்கலிங்கம் கலந்து கொண்டார். நெல்லை மாநகர் மாவட்ட இலக்கிய அணி தலைவரும், அகில இந்திய விளையாட்டு ரசிகர்கள் சங்க தலைவருமான சி.பழனிவேல்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அ.ம.மு.க.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அமைப்பு செயலாளர் ஆர்.பி.ஆதித்தன் தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் முன்னாள் துணைமேயர் ஜெகநாதன், வேட்பாளர் மைக்கேல்ராயப்பன், இளைஞர் அணி இணை செயலாளர் வி.கே.பி.சங்கர், பகுதி செயலாளர்கள் ஹைதர்அலி, பேச்சிமுத்து, சிறுபான்மை பிரிவு செயலாளர் மீரான், தொழிற்சங்க செயலாளர் ஆவின் அண்ணாசாமி, மகளிர் அணி செயலாளர் ராம்சன் உமா, பேரவை பகுதி செயலாளர் பாக்கியராஜ், பொதுக்குழு உறுப்பினர் உக்கிரபாண்டியன், தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சிவ அருணா அருண்குமார், இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் திவ்யா யாதவ், இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், வக்கீல் பிரிவு செயலாளர் ராஜ பிரபாகர், துணை செயலாளர் சின்னத்துரை, வக்கீல்கள் முத்துராஜ், லட்சுமண ரமேஷ், நெல்லை பகுதி பேரவை துணை செயலாளர் சிவனணைந்தபெருமாள், எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் போலீஸ் மாயாண்டி, நிர்வாகிகள் வெண்மதி, ஸ்ரீவை சின்னத்துரை, கண்ணன், இசக்கி, ராஜா, மாயாண்டிராஜன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
தி.மு.க.வினர் டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மத்திய மாவட்ட பொருளாளர் அருண்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் அருள்மணி, வட்ட செயலாளர் செல்வகுமார், நிர்வாகிகள் சுரேந்திரன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட பொருளாளரும், நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான ஞானதிரவியம் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஜூடு, பிரின்ஸ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நெல்லை மாவட்ட தலைவர்கள் சங்கர பாண்டியன் (மாநகர்), எஸ்.கே.எம்.சிவகுமார் (கிழக்கு), மாநில சிறுபான்மைபிரிவு ஒருங்கிணைப்பாளர் ஷேக் நாகூர்கனி, மாவட்ட துணைதலைவர் வண்ணை சுப்பிரமணியன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சொக்கலிங்ககுமார், ரெயில்வே கிருஷ்ணன், மருதம் ஆனந்த், மாவட்ட செயலாளர் குறிச்சி கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன், மண்டல தலைவர்கள் மாரியப்பன், அய்யப்பன், பாலாஜி, சேக் பக்கீர்மைதீன், விவசாய அணி தலைவர் சிவன்பாண்டியன், நிர்வாகிகள் மயில்ராவணன், காமராஜ், பிச்சாண்டி, விஜயகுமார், வாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
த.மா.கா.
நெல்லை மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரசார் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட செயலாளர் அண்ணாத்துரை, சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் ரமேஷ்செல்வன், எஸ்.சி.எஸ்.டி. மாநில செயலாளர் கடற்கரை, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜெரீனா, வர்த்தக அணி தலைவர் சக்சஸ் புன்னகை, துணை தலைவர் டி.பி.எஸ். சுப்பிரமணியன், இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜெகநாதராஜா, நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, முருகேசன், ஆனந்த், துரை ஜான்சாமுவேல், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க.வினர் மாவட்ட செயலாளர் முகமது அலி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் துணை செயலாளர் சிவா, பகுதி செயலாளர் ஷேக், பொருளாளர் தேவராஜ், கேப்டன் மன்ற செயலாளர் சுருட்டை மைதீன், ஜாகீர் உசேன், சாகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் கட்சி
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் பகுதி செயலாளர் ஸ்ரீதர்ராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நிர்வாகிகள் கபிரியேல், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இளம் சிறுத்தைகள் எழுச்சி இயக்க மாநில துணை தலைவர் எம்.சி. கார்த்திக் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பொருளாளர் சேகர், ரகுமத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் அந்தோணிதாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நிர்வாகிகள் விக்னேஷ், ஜான்துரைச்சாமி, ஸ்ரீதர், மனோகர், வேல்சாமி, அசோக்குமார், சக்தி, அழகப்பன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். துணை செயலாளர் துரைப்பாண்டியன், மாணவர் அணி செயலாளர் முத்துப்பாண்டியன், நிர்வாகிகள் தங்கராஜ் பாண்டியன், மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட யோகாசன சங்கத்தினர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எஸ்.நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். செயலாளர் அழகேசராஜா, ஆலோசகர் ரவிகுமார், டேனியல், நாராயணன், கணேஷ்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை காமராஜர் சிலை பராமரிப்பு குழுவினர் தலைவர் நாராயணன், செயலாளர் கணேஷ்பாண்டியன், ஆலோசகர் ஜெயபால் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story






