பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீடு: ஆல்பா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
பிளஸ்-2 தேர்வில் புதுவை ஆல்பா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
புதுச்சேரி,
மாணவி லூயிஸ் அனுசியா 600-க்கு 592 மதிப்பெண்களும், மாணவர்கள் சாத்தப்பன் 576 மதிப்பெண்களும், கமலேஷ் 570 மதிப்பெண்களும் எடுத்து மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியின் நிறுவனர் பாஷிங்கம், இயக்குனர் தனதியாகு ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்து பள்ளியின் இயக்குனர் தனதியாகு கூறும்போது, எங்கள் பள்ளி பிளஸ்-2 பொதுத்தேர்வில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மாணவி லூயிஸ் அனுசியா, மாணவன் சாத்தப்பன் இருவரும் 2 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், மாணவி ரம்யா ஒரு பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களில் 60 பேர் 500-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி லூயிஸ் அனுசியாவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
இந்த சாதனைக்கு துணையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
Related Tags :
Next Story