புதுச்சேரி எம்.பி. தொகுதியில் 81.19 சதவீத வாக்குகள் பதிவு


புதுச்சேரி எம்.பி. தொகுதியில் 81.19 சதவீத வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 19 April 2019 10:59 PM GMT (Updated: 19 April 2019 10:59 PM GMT)

புதுவை எம்.பி. தொகுதியில் 81.19 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

புதுச்சேரி,

புதுவை எம்.பி. தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், மக்கள் நீதிமய்யம், அ.ம.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கடந்த 16-ந்தேதி மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

புதுவை மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு லாஸ்பேட்டை மோதிலால் நேரு, மற்றும் மகளிர் பாலிடெக்னிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் எவ்வளவு வாக்குப்பதிவு நடந்துள்ளது? என்ற விவரம் தொகுதிவாரியாக நேற்று வெளியிடப்பட்டது. புதுவை மாநிலத்தில் உள்ள 9 லட்சத்து 73 ஆயிரத்து 161 வாக்காளர்களில் 7 லட்சத்து 95 ஆயிரத்து 325 பேர் வாக்களித்துள்ளனர். இது 81.19 சதவீதம் ஆகும்.

புதுவை பிராந்தியத்தில் 82.57 சதவீதமும், காரைக்காலில் 79.34 சதவீதமும், மாகியில் 67.43 சதவீதமும், ஏனாமில் 86.51 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக ஊசுடு தொகுதியில் 88.37 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

Next Story