புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் நாய்கள்
மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளதா என்பதை நாய்களால் மோப்பம் பிடித்து கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வு ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனிதர்களை அச்சுறுத்தும் புற்றுநோயைப் பொருத்தவரை, முன்கூட்டியே கண்டறிவதுதான் மிக முக்கியமானது. இதற்கான சோதனைகளுக்கு செலவும் சற்று அதிகம்.
ஆனால், நாய்கள் மூலம் அந்த வேலை இனி எளிதாகிவிடும் என்று கூறப்படுகிறது. ‘பீகில்ஸ்’ என்ற வகை நாய்களை வைத்து அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மருத்துவ நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொண்டது.
அதன்படி, நோயற்ற மனிதர் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உடையவரின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டன. உரிய பயிற்சி அளித்த பின்னர் நாய்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, நுரையீரல் புற்றுநோய் உடையவரின் ரத்த மாதிரிகளை நாய்கள் துல்லியமாகத் தேர்வு செய்தன.
Related Tags :
Next Story