மாவட்ட செய்திகள்

திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள் + "||" + Stolen statue, The thieves had repaid

திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்

திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்
அமெரிக்கா பென்சில்வேனியா வெஸ்ட் செஸ்டர் பாரோ பகுதியில் நடந்த திருட்டு சம்பவமும், அதனை தொடர்ந்து நடந்த நகைச்சுவை சம்பவமும் சமூக ஊடகங்களில் வைரலாக பேசப்படுகிறது.
அது என்ன கதை என்றால்.., குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்ட பகுதியில், வைக்கப்பட்டிருந்த சிங்கம் சிலை ஒன்று திடீரென திருடுபோனது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சோதித்தபோது, இரண்டு திருடர்கள் கைவரிசை காண்பித்திருந்தது தெரிந்தது. கேமராவில் பதிவாகியிருந்த திருட்டு சம்பவத்தையும், திருட்டில் ஈடுபட்ட இரண்டு ஆசாமிகளின் வீடியோ பதிவுகளையும், போலீசார் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

திருட்டில் ஈடுபட்டு கையும், களவுமாக மாட்டிக்கொண்டதை உணர்ந்த திருடர்கள், இரவோடு இரவாக சிலையை திருடிய இடத்திலேயே திரும்ப வைத்துவிட்டனர். மேலும் சிலையுடன், பூங்கொத்து ஒன்றையும், மன்னிப்பு கடிதம் ஒன்றையும் வைத்துவிட்டு சென்றிருக்கின்றனர்.

‘‘வைரலாக பரவிய வீடியோவை பார்த்துதான், திருடர்கள் சிலையை திரும்ப கொடுத்திருக்கிறார்கள். அதனால் வீடியோவை பகிர்ந்தவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். சிலையை திருடியவர்கள் அதை திருப்பிக் கொடுத்தது புத்திசாலித்தனமான முடிவு’’ என்று போலீசார் நன்றி பதிவு வெளியிட்டுள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை