மாவட்ட செய்திகள்

ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி + "||" + Ready for cooking vegetables a year

ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி

ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர், அடுத்த ஒரு வருட சமையலுக்கு தேவையான அத்தனை காய்றிகளையும் நறுக்கி, பிரிட்ஜில் பத்திரப்படுத்தியிருக்கிறார். அதிலிருக்கும் காய்கறிகளை சமைத்துதான், இரவு நேர உணவுகளை தயாரிக்கிறாராம்.
‘‘கேரட்: சீவப்பட்டு, வதக்குவதற்கு ஏற்ப வெட்டப்பட்டு, வெவ்வேறு அளவுகளில் நறுக்கப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கு: வெட்டப்பட்டு, சீவப்பட்டு, பிசையும் பதத்தில் தயார்படுத்தப்பட்டுள்ளது. வெங்காயம்: வட்டமாக நறுக்கப்பட்டதுடன், சின்னதாகவும் வெட்டப்பட்டுள்ளது’’ என்று தன்னுடைய முன்னேற்பாடுகளை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டவர், ஒரு வருடத்திற்கு தேவையான மொத்த காய்கறிகளையும், மொத்த விலைக்கு வாங்கியிருக்கிறார்.

20 கிலோ உருளைக்கிழங்குகள், 15 கிலோ கேரட், 15 கிலோ சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் 10 கிலோ தக்காளி... இவற்றுடன் வேறு சில காய்கறிகளையும், வெறும் 45 பவுண்டு செலவில் வாங்கியிருக்கிறார்.

‘‘எனக்கு பல்கலைக்கழக வேலை இருக்கிறது. என்னுடைய இரு குழந்தைகளும் பள்ளி முடிந்ததும், விளையாட்டு வகுப்புகளுக்கு சென்றுவிட்டுதான் வீடு திரும்புவார்கள். அதனால் இரவு நேர சமையலுக்கு காய்கறி நறுக்க யாருக்குமே நேரமில்லை. அதனால்தான் முன்கூட்டியே நறுக்கி, சமைப்பதற்கு தயாராக வைத்துவிடுகிறேன். இவை முன்கூட்டியே சமைத்த காய்கறிகள் அல்ல. பச்சை காய்கறிகள்தான், சமைய லுக்கு ஏதுவாக நறுக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளன’’ என்கிறார் அந்த பெண்மணி.

மொத்த காய்கறிகளையும் வெவ்வேறு வகையான உணவுகளுக்கு ஏற்ப, வெவ்வேறு அளவுகளில் நறுக்க, அவருக்கு மொத்தம் 11 மணிநேரம் தேவைப்பட்டதாம்.

அதிகம் வாசிக்கப்பட்டவை