மீனவர்கள் வலையில் அதிகம் சிக்கிய கேரை மீன்கள் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்


மீனவர்கள் வலையில் அதிகம் சிக்கிய கேரை மீன்கள் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்
x
தினத்தந்தி 21 April 2019 4:15 AM IST (Updated: 20 April 2019 8:12 PM IST)
t-max-icont-min-icon

ஈஸ்டர் பண்டிகைக்கு ஊர் திரும்பிய மீனவர்கள் வலையில் கேரை மீன்கள் அதிக அளவு சிக்கியது. அந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

குளச்சல்,

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும், ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுமர மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள்.

அவ்வாறு செல்லும் விசைப்படகு மீனவர்கள் நடுக்கடலில் தங்கியிருந்து மீன்பிடித்து வருவார்கள். ஆனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை என்பதால், மீனவர்கள் பலரும் நேற்று ஊர் திரும்பினார்கள். அதன்படி குளச்சலில் இருந்து மீன்பிடிக்க சென்ற 25–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் குளச்சல் துறைமுகத்துக்கு வந்தது. அவ்வாறு கரை திரும்பிய மீனவர்கள் வலையில் கேரை மீன்கள் அதிக அளவு சிக்கியிருந்தது. ஒரு மீன் 50 கிலோ முதல் 100 கிலோ வரை எடை கொண்டதாக இருந்தது. அந்த மீன்களை விசைப்படகில் இருந்து மீனவர்கள் துறைமுக தங்குதளத்துக்கு கொண்டு வந்தனர்.

அங்கு மீன்கள் ஏலம் விடப்பட்டது. கேரை மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

பின்னர் அந்த மீன்கள் ஐஸ் பாக்சில் அடைக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏராளமான மீனவர்கள் கரை திரும்பியதால், குளச்சல் துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story