வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு


வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு
x
தினத்தந்தி 21 April 2019 4:30 AM IST (Updated: 20 April 2019 9:22 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 24 மணிநேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 18–ந்தேதி நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உரிய போலீஸ் பாதுகாப்புடன் தர்மபுரி செட்டிக்கரை அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து அறைகளில் வைக்கும் பணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் மலர்விழி மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த பணியை நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளர் சஞ்சிவ்குமார் பெஸ்ரா, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் ஷாந்தாராம், போலீஸ் சூப்பிரண்டு ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லாகான், உதவி கலெக்டர் சிவன்அருள் ஆகியோர் பார்வையிட்டனர்.

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்ற அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி ஆகியவற்றில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 இடங்களில் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் சி.சி.டி.வி. கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. சுழற்சி முறையில் 24 மணிநேரமும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story