ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி எம்.பி.ஏ. பட்டதாரி சாவு சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி எம்.பி.ஏ. பட்டதாரி சாவு சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 21 April 2019 3:30 AM IST (Updated: 20 April 2019 9:31 PM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி சேலம் மாவட்டத்தை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி பரிதாபமாக இறந்தார்.

பென்னாகரம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அமரகுந்தி தாதபிள்ளையூரை சேர்ந்தவர் செங்கோட்டையன், விவசாயி. இவருடைய மகன் சிவபெருமாள் (வயது 30). எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் தனது நண்பர்கள் 10 பேருடன் நேற்று சுற்றுலா வாகனத்தில் ஒகேனக்கல்லுக்கு வந்தார். நண்பர்கள் அனைவரும் ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.

பின்னர் அவர்கள் ஆலாம்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் குளித்தபோது சிவபெருமாள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று சிவபெருமாளை தேடினர். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் வாலிபரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து இறந்த சிவபெருமாளின் உடலை போலீசார், கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story