மாவட்ட செய்திகள்

குழந்தையின் இதய துடிப்பு, நலன் அறிய பயன்படும் கருவி குறித்து அரசு மருத்துவமனையில் கருத்தரங்கம் + "||" + The child's heart rate, the government hospital seminar on the use of welfare

குழந்தையின் இதய துடிப்பு, நலன் அறிய பயன்படும் கருவி குறித்து அரசு மருத்துவமனையில் கருத்தரங்கம்

குழந்தையின் இதய துடிப்பு, நலன் அறிய பயன்படும் கருவி குறித்து அரசு மருத்துவமனையில் கருத்தரங்கம்
தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தையின் இதய துடிப்பு, நலன் அறிய பயன்படும் கருவி குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதனை தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்,

தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தைகள் இதய துடிப்பு மற்றும் நலன் அறிய பயன்படும் (சி.டி.ஜி.) கருவி குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கை தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.


கருத்தரங்கில் துணை முதல்வர் ஆறுமுகம், துணை கண்காணிப்பாளர் குமரன், டாக்டர் அமுதவடிவு மற்றும் மகளிர் மகப்பேறு துறை தலைவி டாக்டர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கருத்தரங்கில் கருவியின் பயன்பாடு குறித்து ஐதராபாத் பெர்னாண்டஸ் மருத்துவமனையின் நிபுணத்துவம் பெற்ற மகப்பேறு மருத்துவ குழுவினரால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் தஞ்சை மருத்துவக்கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை டாக்டர்கள், தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மருத்துவக்கல்லூரி இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவில் கும்பாபிஷேகத்தில் ஐஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி-மயக்கம் மருத்துவமனையில் அனுமதி
திருவெண்காடு அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் ஐஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2. பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 35 மாணவர்களுக்கு வாந்தி மருத்துவமனையில் அனுமதி
திருக்குவளையில், பள்ளி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 35 மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. நிவாரண பொருட்கள் கிடைக்காததால் விரக்தி: மின்மாற்றியில் ஏறி, வாலிபர் தற்கொலை முயற்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
புயல் நிவாரண பொருட்கள் கிடைக்காத விரக்தியில் மின்மாற்றியில் ஏறி, மின்கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் படுகாயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
4. குடும்ப தகராறில் கத்தி, மதுபாட்டிலால் மாறி, மாறி தாக்கிக்கொண்ட கணவன்-மனைவி இருவரும் மருத்துவமனையில் அனுமதி
குடும்ப தகராறில் கத்தி, மதுபாட்டிலால் மாறி, மாறி தாக்கிக்கொண்ட கணவனும், மனைவியும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5. எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 4 மாத குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்து 4 மாதங்கள் ஆன குழந்தைக்கு டாக்டர்கள் நவீன இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை