நெல்லை அருகே டாஸ்மாக் கடையில் 334 மதுபாட்டில்கள் திருட்டு தேர்தல் விடுமுறையை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை


நெல்லை அருகே டாஸ்மாக் கடையில் 334 மதுபாட்டில்கள் திருட்டு தேர்தல் விடுமுறையை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 21 April 2019 3:00 AM IST (Updated: 21 April 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே தேர்தல் விடுமுறையை பயன்படுத்தி டாஸ்மாக் கடையில் 334 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

மானூர், 

நெல்லை அருகே தேர்தல் விடுமுறையை பயன்படுத்தி டாஸ்மாக் கடையில் 334 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

டாஸ்மாக் கடை

நெல்லை அருகே உள்ள அழகியபாண்டியபுரம்- உக்கிரன்கோட்டை ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மேற்பார்வையாளராக அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த ரவி (வயது 46) வேலை பார்த்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட அரசு உத்தரவிட்டது. இதனால் கடந்த 15-ந் தேதி இரவு வியாபாரத்தை முடித்து விட்டு ரவி கடையை பூட்டிவிட்டு சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை டாஸ்மாக் கடையின் ஷட்டர் திறந்து கிடப்பதாக அருகில் இருந்தவர்கள் ரவிக்கு தகவல் தெரிவித்தனர்.

334 மதுபாட்டில்கள் திருட்டு

உடனே ரவி அங்கு சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றுபார்த்தபோது அங்கு இருந்த 334 மதுபாட்டில்களை காணவில்லை. அதனை நாடாளுமன்ற தேர்தல் விடுமுறையை பயன்படுத்தி மர்மநபர்கள் திருடி சென் றது தெரியவந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த ரவி இதுகுறித்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு போன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.68 ஆயிரத்து 320 இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story