மாவட்ட செய்திகள்

சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா + "||" + Chitra Poornima Festival at Madurai Kaliamman Temple

சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது.
பெரம்பலூர்,

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சென்னை கோட்டூர் ஸ்ரீமகாமேரு மண்டலி சார்பில் சித்ரா பவுர்ணமி விழா நடத்தப்படுகிறது. அதன்படி விகாரி ஆண்டின் சித்ரா பவுர்ணமி விழா விமரிசையாக நடந்தது. இதனையொட்டி காலையில் சண்டி ஹோமம் நடந்தது.


இதற்கிடையில் கோவில் தங்கரத பிரகாரத்தில் மதுரகாளியம்மன் உற்சவ சிலை வண்ணமலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு காலை 8 மணி முதல் சிவானந்த லகரி, சவுந்தர்ய லகரி, லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. இதில் சென்னை, நாமக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், சேலம், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல நூற்றுக்கணக்கான சுமங்கலிப் பெண்கள் கலந்து கொண்டு பாராயணத்துடன் குங்கும அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.

விழாவிற்கு ஸ்ரீமதுராம்பிகாநந்த பரஹ்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் தலைமை வகித்து சண்டி ஹோமத்தை நடத்திவைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதனை தொடர்ந்து மதுரகாளியம்மன் கோவில் மண்டபத்தில் மகா அன்னதானம் நடந்தது. சண்டி ஹோமம் மற்றும் சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை ஏற்பாடுகளை ஸ்ரீமகா மேரு மண்டலியின் நிர்வாக பொறுப்பாளர் சுப்ரமணியன், ஆன்மிக மெய்யன்பர்கள் மற்றும் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. வயலோகம், காரையூர் முத்துமாரியம்மன் கோவில்களில் பூச்சொரிதல் விழா
வயலோகம், காரையூர் முத்துமாரியம்மன் கோவில்களில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
2. திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா
திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா நடந்தது.
3. அனைத்து போட்டி தேர்வுகளையும் மாணவர்கள் எழுத தயாராக வேண்டும் மாவட்ட நீதிபதி பேச்சு
மாணவர்கள் அனைத்து போட்டி தேர்வுகளையும் எழுத தயாராக வேண்டும் என்று மாவட்ட நீதிபதி சுமதி கூறினார்.
4. பெரம்பலூர் பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக விழா
பெரம்பலூர் பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக விழா நடைபெற்றது.
5. மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இன்று வேடபரி நிகழ்ச்சி நடக்கிறது.