சித்ரா பவுர்ணமி பாலாற்றங்கரையில் நிலாச்சோறு சாப்பிட்ட பக்தர்கள்


சித்ரா பவுர்ணமி பாலாற்றங்கரையில் நிலாச்சோறு சாப்பிட்ட பக்தர்கள்
x
தினத்தந்தி 20 April 2019 10:15 PM GMT (Updated: 20 April 2019 7:35 PM GMT)

சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் பாலாற்றங்கரையில் நிலாச்சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

காஞ்சீபுரம்,

சித்ரா பவுர்ணமியையொட்டி புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் நடவாவி திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காஞ்சீபுரம் பாலாற்றங்கரையில் எழுந்தருளினார். அப்போது அர்ச்சகர்கள் கற்பூர தீபாராதனை காட்ட, பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். வரதராஜபெருமாளையும், ஸ்ரீதேவி, பூதேவியையும் பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் பாலாற்றங்கரையில் நிலாச்சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர். வரதராஜபெருமாள் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் செவிலிமேடு விளக்கடி கோவில் தெரு, டி.கே.நம்பி தெரு வழியாக கோவிலை வந்தடைந்தார்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், கோவில் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Next Story