தொழில்நுட்ப கோளாறு காரணமாக தானே-பன்வெல் இடையே ரெயில்சேவை பாதிப்பு பயணிகள் கடும் அவதி


தொழில்நுட்ப கோளாறு காரணமாக தானே-பன்வெல் இடையே ரெயில்சேவை பாதிப்பு பயணிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 21 April 2019 5:00 AM IST (Updated: 21 April 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தானே - வாஷி, நெருல், பன்வெல் இடையே ரெயில்சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மும்பை,

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தானே - வாஷி, நெருல், பன்வெல் இடையே ரெயில்சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

தொழில்நுட்ப கோளாறு

மத்திய ரெயில்வேயின் டிரான்ஸ்ஹார்பர் வழித் தடமான தானே - பன்வெல் இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை துர்பே அருகே ஒவர்ஹெட் வயரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் தானே - வாஷி, நெருல், பன்வெல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சென்ற ரெயில்வே ஊழியர்கள் சுமார் அரை மணி நேரமாக தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

பயணிகள் அவதி

இதன் காரணமாக ரெயில்கள் சுமார் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. மேலும் பயணிகள் அதிகம் வந்து செல்லும் காலை நேரத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. தாமதமாக வந்த ரெயில்களில் பயணிகள் ஏறும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Next Story