முல்சி அணையில் இருந்து புனே மக்களுக்கு குடிநீர் முதல்-மந்திரி பட்னாவிஸ் உறுதி
முல்சி அணையில் இருந்து புனே மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்து உள்ளார்.
புனே,
முல்சி அணையில் இருந்து புனே மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்து உள்ளார்.
அனல் பறக்கும் பிரசாரம்
புனே நாடாளுமன்ற தொகுதிக்கு 3-ம் கட்டமாக நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் மாநில மந்திரி கிரிஷ் பாபத் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மோகன் ஜோஷி களம் காண்கிறார்.
இன்று மாலையுடன் பிரசாரம் முடிகின்ற நிலையில் 3-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள புனே உள்ளிட்ட 14 தொகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் கிரிஷ்பாபத்துக்கு ஆதரவாக புனேயில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
முல்சி அணையில் இருந்து குடிநீர்
அப்போது அவர் முல்சி அணையில் இருந்து புனே மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் முல்சி அணையில் இருந்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் உள்ள பிரச்சினை தீர்க்கப்படும் என்றார்.
புனேயில் உள்ள முல்சி அணை டாடா மின்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த நிறுவனம் முல்சி அணையில் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. மின் உற்பத்தி செய்யப்படும் நீர் பின்னர் கடலில் கலக்கிறது. அந்த நீரை தான் புனே மக்களுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-மந்திரி உறுதி அளித்து உள்ளார்.
Related Tags :
Next Story