போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் 27 பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்படுகின்றன


போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் 27 பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்படுகின்றன
x
தினத்தந்தி 21 April 2019 4:00 AM IST (Updated: 21 April 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் மாநிலத்தில் 27 பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்பட உள்ளன.

மும்பை,

போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் மாநிலத்தில் 27 பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்பட உள்ளன.

72 ஆயிரம் காலிஇடங்கள்

மராட்டியத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் உள்ளன.

இதில் கடந்த கல்வி ஆண்டில் 72 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கூட 5 ஆயிரத்து 200 இடங்கள் காலியாக இருந்தன.

டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தால் போதிய வேலை வாய்ப்பு இல்லாமல் போனதும், கல்லூரிகளின் அதிக எண்ணிக்கையும் தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

27 கல்லூரிகள் மூடல்

இந்தநிலையில், மாநிலத்தில் உள்ள 27 பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகங்கள் மாநில உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப துறைக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் போதிய மாணவர்கள் இல்லாததால் கல்லூரியை மூட அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளது.

இதுபற்றி கல்வி மந்திரி வினோத் தாவ்டே கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தான் இறுதி முடிவு எடுக்கும்’’ என்றார்.

Next Story