குடிபோதையில் போலீஸ் வேனை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் பணிஇடைநீக்கம் கமிஷனர் நடவடிக்கை


குடிபோதையில் போலீஸ் வேனை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் பணிஇடைநீக்கம் கமிஷனர் நடவடிக்கை
x
தினத்தந்தி 21 April 2019 4:00 AM IST (Updated: 21 April 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் போலீஸ் வேனை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரரை பணி இடைநீக்கம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.

மும்பை,

குடிபோதையில் போலீஸ் வேனை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரரை பணி இடைநீக்கம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.

வாகன விபத்து

மும்பை மஜித்பந்தர் பகுதியை சேர்ந்தவர் இம்தியாஸ் சேக் (வயது32). உணவு வினியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு லால்பாக் மேம்பாலம் அருகே சென்ற போது போலீஸ் வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இம்தியாஸ் சேக் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்தை ஏற்படுத்தியவர் காலாசவுக்கி போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் ராஜேஷ் சில்கே(45) என்பது தெரியவந்தது.

பணி இடைநீக்கம்

அவரிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில் குடிபோதையில் போலீஸ் வேன் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உதவி போலீஸ் கமிஷனர், மும்பை போலீஸ் கமிஷனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலுக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் அவரை பணி இடைநீக்கம் செய்து துறை ரீதியாக விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.
1 More update

Next Story