மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளித்தார்
மதுரை சித்திரை திருவிழாவில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மதுரை,
இதையடுத்து, அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு வந்த அழகர், சித்திரை முழுநிலவு தினமான நேற்று முன்தினம் வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து ராமராயர் மண்டபம் சென்றார். இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். இரவில் அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
நேற்று காலை 6 மணிக்கு கள்ளழகர் திருமஞ்சனம் ஆகி ஏகாந்த சேவையில் பக்தி உலா நடைபெற்றது. பின்பு கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் சென்றார். மதியம் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.
தவளையாக இருந்த தபசு முனிவருக்கு சாபவிமோசனம் அளித்ததை சுட்டிக்காட்டும் வகையில், முனிவரின் உருவ சிலை அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அவர் சாப விமோசனம் பெற்றதை விளக்க, நாரை பறக்கவிடப் பட்டது. அதைக் கண்டு பக்தர்கள் தரிசித்தனர்.
பிற்பகல் 3.30 மணிக்கு அனுமார் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடந்தது. இரவில் விடிய, விடிய நடைபெறும் தசாவதார காட்சியை காணவும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். முத்தங்கி, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் உள்பட பல்வேறு அவதாரங்களில் கள்ளழகரை தரிசிக்கலாம் என்பதால் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் பக்தி உலா நடக்க உள்ளது. பகல் 12 மணிக்கு ராஜாங்க திருக்கோலத்தில் ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்தில் எழுந்தருள்கிறார்.
பின்னர் இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, நாளை அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். பின்னர் மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 23-ந் தேதி காலை 9 மணிக்கு அழகர்கோவிலை அடைகிறார்.
மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கியது குறித்த புராண வரலாறு வருமாறு:-
மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண மட்டும் இங்கு வருவதில்லை. மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காகவும் வருகிறார். அழகர்மலை உச்சியில் என்றும் தண்ணீர் வற்றாத நூபுர கங்கை உள்ளது. அங்கு ஒருநாள் சுதபஸ் என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கி நீராடியபடி மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருந்தார். அப்போது துர்வாச முனிவர் தனது சீடர்களுடன் நூபுர கங்கைக்கு வந்தார். அவரை சுதபஸ் முனிவர் கவனிக்கவில்லை. குளித்து முடித்து பூஜைகளை செய்த பின் நேரம் கடந்து வந்து துர்வாச முனிவரை வரவேற்றார். அதனால் துர்வாச முனிவர் கோபமடைந்து சுதபஸ் முனிவரை பார்த்து மண்டூகம் (தவளை) ஆகும்படி சாபம் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுதபஸ் முனிவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். உடனே துர்வாச முனிவர், சித்திரை மாதம் பவுர்ணமி தினத்துக்கு மறுநாள் வரும் கிருஷ்ணபட்ஷ பிரதமை திதியில் சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகராக வந்து சாப விமோசனம் அளிப்பார் என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். சாபத்தினால் தவளையாக மாறிய சுதபஸ் முனிவர், சுந்தரராஜப்பெருமாளை நினைத்து தவமிருந்தார். தவத்தினால் மனம் இறங்கிய சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரை வந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கியதாக வரலாறு கூறுகிறது.
இந்த சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த நிகழ்ச்சியில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளித்தார். இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மதுரை சித்திரைத் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த 17-ந் தேதி நடந்தது.

Related Tags :
Next Story