தர்மபுரி மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
தர்மபுரி,
ஏசு கிறிஸ்து யூதர்களால் சிலுவையில் அறையப்பட்டார். பின்னர் 3 நாளில் ஏசு கிறிஸ்து மீண்டும் உயிர்தெழுந்தார். இதனை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் மறை மாவட்ட ஆயர் தலைமையில் பங்கு தந்தைகள் ஆரோக்கியசாமி, மரிய லூயிஸ், இருதயராஜ், சின்னப்பன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் தர்மபுரி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.
இதே போன்று தர்மபுரி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் பாதிரியார் பிரபுமோகன் தலைமையில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் கோவிலூரில் பங்கு தந்தை வில்லியம்ஸ் தலைமையிலும், பூலாப்பட்டியில் பங்கு தந்தை புஷ்பராஜ் தலைமையிலும், கடகத்தூரில் பங்குதந்தை அருள்ஜோதி தலைமையிலும், செல்லியம்பட்டியில் பங்குதந்தை ஜார்ஜ் தலைமையிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
Related Tags :
Next Story