பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 22 April 2019 4:15 AM IST (Updated: 21 April 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுந்தரக்கோட்டை,

மன்னார்குடியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மன்னார்குடி வட்ட கிளையின் ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிளை தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். ஆண்டறிக்கையை செயலாளர் மகாதேவனும், நிதிநிலை அறிக்கையை பொருளாளர் பன்னீர்செல்வமும் சமர்ப்பித்தனர். முன்னதாக சங்க கொடியை மூத்த உறுப்பினர் ஞானசுந்தரம் ஏற்றி வைத்தார். சங்க மாநில தலைவர் மாணிக்கம் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அறிவித்து, அதனை சென்னை பகுதிக்கு மட்டும் தற்போது நடைமுறைப்படுத்தி உள்ளது. இதனை மாநிலம் முழுமைக்கும் விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படி ரூ.1,000 வழங்க வேண்டும். குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில பொதுச்செயலாளர் முத்துகுமாரவேலு, மாநில பொருளாளர் ஹரிகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

Next Story