விளையாட்டு வீரர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்


விளையாட்டு வீரர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 21 April 2019 10:45 PM GMT (Updated: 21 April 2019 6:19 PM GMT)

தேனி மாவட்டத்தை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மத்திய அரசு வழங்கும் பல்வேறு விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம்.

தேனி,

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு தொடர்புடையவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி, 2019-ம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது, அர்ஜுனா விருது, துரோணாச்சார்யா விருது, ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் விருது போன்ற விருதுகள் வழங்கப்பட உள்ளன.

விளையாட்டு துறையில் நாட்டுக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் வகையில் தேசிய, சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்தவர்கள் இந்த விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம். விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஒரு உறையில் வைத்து, அந்த உறையின் மேல் எந்த விருதுக்கு விண்ணப்பம் செய்யப்படுகிறது என்ற பெயரை குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ‘உறுப்பினர்-செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை-84’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

துரோணாச்சார்யா, ராஷ்டிரிய கேல் புரோட்ஸஹான் ஆகிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாள்.

அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பங்கள் அதற்கான கடைசி தேதிக்குள் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இத்தகவலை தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ் தெரிவித்தார்.

Next Story