பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு விவசாயிகள் கவலை
பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டத்தில் எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
அந்த கிழங்கு ஆலையில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் அதன் விலையை நிர்ணயம் செய்கின்றனர்.
கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.10 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை விலை சரிவடைந்து ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனையாகி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் சிப்ஸ் தயார் செய்வதற்காக வாங்கிசெல்லும் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.10 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.
மரவள்ளிக்கிழங்கு விலை சரிவால் அதனை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story