7 பேர் சாவுக்கு காரணமான பூசாரி தனபால் கைது போலீசார் நடவடிக்கை


7 பேர் சாவுக்கு காரணமான பூசாரி தனபால் கைது போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 22 April 2019 4:30 AM IST (Updated: 22 April 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

கோவில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் சாவுக்கு காரணமான பூசாரி தனபாலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

துறையூர்,

துறையூரை அடுத்த முத்தையம்பாளையம் கருப்பு சாமி கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று நடந்த பிடிக்சுாசு வழங்கும் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு துறையூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூ ஆகியோர் நேரடி விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து துறையூர் போலீசார் கருப்பு கோவிலின் பூசாரி தனபால் மீது இந்திய தண்டனை சட்டம் 304 (2)-ன் கீழ் (எதிர்பாராமல் நடந்த விபத்தில் இறப்புக்கு காரணமாக இருத்தல்) வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக அவரை பிடித்து சென்ற தனியாக ஒரு இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். நேற்று இரவு தனபாலை போலீசார் கைது செய்தனர்.

தனபாலின் சொந்த ஊர் மண்ணச்சநல்லூர் சிவன் கோவில் தெரு ஆகும். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

Next Story