பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா சேலம் மைய புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா சேலம் மைய புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
சேலம்,
பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா சேலம் மைய புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சேலம் ஜங்ஷனில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மாநில தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். தென் பிராந்திய அகில இந்திய முன்னாள் துணை தலைவர் திரிசங்கு, தென் பிராந்திய அகில இந்திய காப்பாளர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் 2019-2020 ஆண்டிற்கான தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. அதன்படி சேலம் மைய தலைவராக ரங்கநாதன், துணைத்தலைவராக கார்மேகம், செயலாளராக சிவபெருமாள், இணைசெயலாளராக கருணாநிதி, பொருளாளராக துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர்களாக சண்முகவேல், மோகன், முருகானந்தம், நடராஜன் ஆகியோருக்கு அகில இந்திய முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ணன் பேசுகையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும், அனைவரும் ஒற்றுமையாக செயல்படவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். இந்த விழாவில் முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், அவர்களின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story