இலங்கையில் குண்டு வெடிப்பு எதிரொலி: வேதாரண்யம் கடலோர கிராமங்களில் கண்காணிப்பு பணி தீவிரம்


இலங்கையில் குண்டு வெடிப்பு எதிரொலி: வேதாரண்யம் கடலோர கிராமங்களில் கண்காணிப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 April 2019 4:00 AM IST (Updated: 22 April 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்களின் எதிரொலியாக வேதாரண்யம் கடலோர கிராமங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேதாரண்யம்,

இலங்கையில் நேற்று அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களால் இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் வேதாரண்யம் சட்ட ஒழுங்கு பிரிவு போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட் டனர்.

வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், கடலோர காவல் குழும துணை சூப்பிரண்டு கலிதீர்த்தான், வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் கண்காணிப்பு பணி நடந்தது. வேதாரண்யம் கடற்கரை வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா? குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் யாரேனும் வேதாரண்யம் பகுதியில் பதுங்கி உள்ளனரா? என்பது பற்றி கண்காணிப்பு பணியின்போது போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Next Story