கோவில்பட்டியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்


கோவில்பட்டியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 22 April 2019 2:45 AM IST (Updated: 22 April 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

புனித சவேரியர் ஆலயம்

கிறிஸ்தவர்களின் தவகாலமான 40 நாட்கள் நோன்பிற்கு பிறகு பாஸ்கா என்று அழைக்கப்பட கூடிய புனித வியாழன், இயேசு சிலுவையில் இறந்தபுனித வெள்ளி, பின்னர் இயேசு கிறிஸ்து உயிர்த்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு வண்டானம் புனித சவேரியர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.

நேற்று முன்தினம் இரவு தொடங்கி நள்ளிரவில் திருவிழிப்பு திருப்பலியும், அதன் பின்னர் மக்கள் ஆலயத்தில் விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. அதனை தொடர்ந்து உயிர்த்த ஆண்டவரின் சப்பரம் மந்திரிக்கப்பட்டு ஊரில் உள்ள தெருக்கள் வழியாக எடுத்து வரப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஈஸ்டர் பண்டிகையின் சிறப்பு நிகழ்ச்சியாக ஆலய வளாத்தில் உள்ள கல்கொடிமரம் அருகே புதிய வேப்பமரக்கன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆலய பங்குதந்தை அருள் நேசமணி தலைமை தாங்கினார்.

சூசையப்பர் ஆலயம்

அதே போல் கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஆலய பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்கு தந்தை மிக்கேல் அடிகளார், திருச்சி ஜேசுசபை அருள்தாஸ் அடிகளார் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இரவு 11 மணிக்கு நன்றி வழிபாடு, அதனை தொடர்ந்து இறைமக்கள் தங்கள் கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. 12 மணிக்கு இயேசு பிறப்பை கொண்டாடும் வகையில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இயேசு கிறிஸ்து கல்லறையில் இருந்து வெளியே உயிருடன் வருவது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர்.

கயத்தாறு

அதே போல் கயத்தாறில் உள்ள லூர்து மாதா ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இயேசுநாதர் சப்பர பவனி நடந்தது. இந்த பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. கிறிஸ்தவர்கள் அந்த சப்பர பவனியின்போது உப்பு மிளகு, தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

Next Story