சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை


சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 April 2019 4:30 AM IST (Updated: 22 April 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

பொன்பரப்பி சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18-ந் தேதி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளை தொடர்ந்து காவல் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த கிராமத்தில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டோர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் சட்டம்- ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. மோதலினால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொதுமக்களின் சேதமடைந்த வீடுகளின் விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

இதில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொன்பரப்பி கிராமத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி கிராமத்தில் தற்போது அமைதியான சூழல் நிலவி வருகிறது. கலவரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான மற்றும் உண்மைக்கு புறப்பான செய்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர். 

Next Story