வாளையார் அருகே ரூ.5½ லட்சம் போதை ஸ்டாம்புகள் பறிமுதல் வாலிபர் கைது


வாளையார் அருகே ரூ.5½ லட்சம் போதை ஸ்டாம்புகள் பறிமுதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 April 2019 3:45 AM IST (Updated: 22 April 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

வாளையார் அருகே ரூ.5½ லட்சம் போதை ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாலக்காடு,

பாலக்காடு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு ஆணையாளர் ராஜாசிங் தலைமையில் போலீசார் நேற்று காலையில் வாளையார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தமிழ்நாடு கோவையில் இருந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரை நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதையொட்டி அவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவருடைய உள்ளாடையில் எல்.எஸ்.டி. என்ற போதைப்பொருள் தடவப்பட்ட 16 ஸ்டாம்புகளும், 5 கிராம் ஹசீஸ் எண்ணெயும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5½ லட்சம் ஆகும்.

இதையொட்டி போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் கொச்சியை சேர்ந்த பிரமோத் (வயது 22) என்று தெரிய வந்தது. பின்னர் அவரிடம் இருந்த போதை ஸ்டாம்புகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பிரமோத்தை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story