ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க பொதுமக்கள் கோரிக்கை
ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை,
மாவட்ட தலைநகரான சிவகங்கையில் இருந்து தொழில் வேலை மற்றும் அலுவலகம் தொடர்பாகவும் மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் சென்னைக்கு நாள் தோறும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். சென்னைக்கு செல்பவர்களில் பெரும்பாலும் ரெயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர்.
இதனால் ரெயில்களில் இடம் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைகின்றனர். மேலும் பகல் நேரங்களில் காரைக்குடி-திருச்சி-விழுப்புரம் போன்ற இடங்களுக்கு செல்ல விரும்புபவர்களும் போதுமான ரெயில் வசதி இன்றி தவிக்கின்றனர்.
எனவே ராமேசுவரத்தில் இருந்து சிவகங்கை வழியாக சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரையில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story