மாவட்ட செய்திகள்

சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை + "||" + The girl near Chidambaram, The fire committed suicide

சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை

சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை
சிதம்பரம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம், 

சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படையை சேர்ந்தவர் பிரபு. இவருடைய மனைவி சரண்யா (வயது 29). இவர் கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிப்பால் அவதியடைந்து வந்தார். இதற்காக சரண்யா பல்வேறு பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை என தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த சரண்யா, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவி எரிந்ததில், வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சரண்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.