எல்லை காவல் படையில் 1072 கான்ஸ்டபிள் பணிகள்
எல்லைக் காவல் படையில் கான்ஸ்டபிள் பணிக்கு 1072 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
துணை ராணுவ படைகளில் ஒன்று பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் எல்லைக் காவல் படை. சுருக்கமாக பி.எஸ்.எப். என அழைக்கப்படும் இந்த படைப்பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. தற்போது பி.எஸ்.எப். அமைப்பின் தலைமை இயக்குனரகத்தில் இருந்து ஹெட் கான்ஸ்டபிள் (ரேடியோ ஆபரேட்டர், ரேடியோ மெக்கானிக்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவை ‘குரூப்-சி’ பிரிவின் கீழ் வரும் தற்காலிக பணியிடங்களாகும். ரேடியோ ஆபரேட்டர் பிரிவில் 300 இடங்களும், ரேடியோ மெக்கானிக் பிரிவில் 772 இடங்களும் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-8-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான தேர்ச்சியுடன் பணியிடங்கள் தொடர்பான பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள், அல்லது அறிவியல் பாடங்களை அடக்கிய பிரிவில் 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்ப தாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் பதிவு மே 14-ந் தேதி தொடங்குகிறது. ஜூன் 12-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
தேர்வு செய்யும் முறை
எழுத்துத் தேர்வு, உடல் அளவு மற்றும் உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கான தேர்வு முறைகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளன.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bsf.nic.in/recruitment என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
Related Tags :
Next Story