விமான நிறுவனத்தில் வேலை


விமான நிறுவனத்தில் வேலை
x
தினத்தந்தி 22 April 2019 3:51 PM IST (Updated: 22 April 2019 3:51 PM IST)
t-max-icont-min-icon

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கீழ் பல்வேறு துணை நிறுவனங்கள் செயல்படுகின்றன.

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட். (AIATSL). தற்போது இந்த நிறுவனத்தில் டெபுட்டி டெர்மினல் மேனேஜர், கஸ்டமர் ஏஜென்ட், ராம்ப் சர்வீஸ் ஏஜென்ட், யூடிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 205 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் கஸ்டமர் ஏஜென்ட் பணிக்கு மட்டும் 100 இடங்களும், யூடிலிட்டி ஏஜென்ட் பணிக்கு 60 இடங்களும், ராம்ப் சர்வீஸ் ஏஜென்ட் பணிக்கு 25 இடங்களும் உள்ளன. நேரடி நேர்காணல் மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த பணியிடங்களில் 35 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணிகள் உள்ளன. மேலாளர் தரத்திலான பணிகளுக்கு 55 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.

எம்.பி.ஏ., எச்.ஆர்., மற்றும் இதர பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் கஸ்டமர் ஏஜென்ட் மற்றும் இதர ஏஜென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.500 கட்டணத்திற்கு டி.டி. எடுத்து தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் ஆஜர் ஆகலாம். ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு நாளில் நேர்காணல் நடக்கிறது. ஏப்ரல் 24-ந் தேதி முதல், மே7-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. எந்த பணிக்கு எந்த நாளில் நேர்காணல் நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு நேரில் செல்லவும்.

ஏர் இந்தியா

ஏர்இந்தியா நிறுவனத்திலும் நேர் காணல் அடிப்படையில் டிரெயினி கண்ட்ரோலர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 79 இடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு மட்டும் 54 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிரெயினி கண்ட்ரோலர் பணிக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

நேரடி நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 42 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பி.இ., பி.டெக் படித்தவர்கள் டிரெயினி கண்ட்ரோலர் பணிக்கும், பட்டப்படிப்பு படித்தவர்கள் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் ரூ.500 கட்டண டி.டி. மற்றும் தேவையான சான்றுகளுடன் நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். டிரெயினி கண்ட்ரோலர் பணிக்கு ஏப்ரல் 30-ந் தேதியும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு மே 2-ந் தேதியும் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

இவை பற்றிய விவரங்களை http://www.airindia.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


Next Story