நெய்வேலியில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்
நெய்வேலியில் ராணுவத்துக்கு நேரடி ஆள்சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
ஜூன் மாதம் 7-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை இதற்கான நேர்காணல் நடக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
படை வீரர் (தொழில்நுட்பம்), படைவீரர் (விண்வெளி, ஆயுதப் பொருள் பரிசோதகர்), செவிலியர் உதவியாளர், படைவீரர் (கிளார்க்), ஸ்டோர் கீப்பர், பொது சேவை போன்ற பிரிவில் ராணுவ ஆள்சேர்க்கை முகாம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடக்க இருக்கிறது.
கடலூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த ஆள்சேர்க்கை முகாமில் பங்கெடுக்கலாம்.
பிளஸ்-2 படித்தவர்கள் படைவீரர் (தொழில்நுட்பம்), செவிலியர் உதவியாளர், கிளார்க், ஸ்டோர் கீப்பர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விற்பனையாளர் மற்றும் பொது சேவை பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 17½ வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பொதுப் பணிக்கு 21 வயதுக்கு உட்பட்டவர்கள் சேர்க்கப்படு கிறார்கள். விண்ணப்பதாரர் திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற மே 18-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மே 21-ந் தேதி முதல் இணையதளம் வழியாக நுழைவு அட்டை பெற்றுக்கொண்டு, ஆள்சேர்க்கை முகாமில் கலந்துகொள்ளலாம்.
அப்போது நுழைவு அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஒருவர் எந்த நாளில் முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என்பது நுழைவு அட்டையில் (அட்மிட் கார்டு) குறிப்பிடப்படும்.
ஆள்சேர்க்கை முகாம் ஜூன் மாதம் 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை, நெய்வேலி பாரதி மைதானத்தில் நடைபெறும். ஆவணங்கள் பரிசோதனை, உடல் தகுதித் தேர்வு, உடல் அளவுத் தேர்வுகள் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் செய்யலாம்.
Related Tags :
Next Story