பயனுள்ள கோடைகால பயிற்சிகள்


பயனுள்ள கோடைகால பயிற்சிகள்
x
தினத்தந்தி 22 April 2019 12:10 PM GMT (Updated: 22 April 2019 12:10 PM GMT)

வேலை வாய்ப்புக்கு பயன்படும் மிகஅரிய தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

சென்னை கிண்டியில் இயங்கி வரும் ‘சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் டூல் டிசைன்’ (C.I.T.D) பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்புக்குப் பயன்படும் மிக அரிய தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இவை ஒரு மாதம் மற்றும் இரண்டு மாதங்கள் பயிற்சிக்காலமாக கொண்ட குறுகியகால படிப்பு களாகும். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை வகுப்புகள் நடை பெறுகின்றன. எனவே இந்த கோடை காலத்திலேயே படித்து சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

ஆட்டோகேட் பயிற்சி, பொறியியல் பிரிவில் இருப்பவர்களுக்கு முக்கியமானது என்பது பலரும் அறிந்தது. மெக்கானிக்கல், ஆர்கிடெக்சர், மேனுபக்சரிங் துறையில் இதன் பயன்பாடு அதிகம். இந்த துறையில் எளிதில் வேலைவாய்ப்பை பெற விரும் சராசரி மாணவர்கள் சி.ஐ.டி.டி. வழங்கும் ஒருமாத கால பயிற்சியில் ஆட்டோகேட் கற்றுக்கொள்ளலாம். இதில் சேர விரும்புவோர் ஏதாவது பாடப்பிரிவில் ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும். தினமும் 3 மணி நேரம் வகுப்பு நடக்கிறது. இதற்கு கட்டணமாக ரூ.5900 வசூலிக்கப்படுகிறது.

என்ஜினீயரிங் படித்தவர்கள், கூடுதலாக ஏதேனும் ஒரு துணைப்படிப்பு சான்றிதழ் இருந்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்புவார்கள். அவர்கள் கிரியோ, கேட்யா, சாலிட் வொர்க்ஸ், ஆன்சஸ், மாஸ்டர்கேம், ஹைப்ரமெஸ், யூனிகிராபிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ் ஆகிய பயிற்சிகளில் சேரலாம். இவர்கள் மெக்கானிக்கல், புரொடக்சன், ஆட்டோமொபைல், ஏரோநாட்டிக்கல் அல்லது இணையான பாடப்பிரிவுகளில் குறைந்தபட்சம் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். பிஇ., பி.டெக், எம்.இ., எம்.டெக் படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு பயிற்சிக் கட்டணம் ரூ.8900, மெக்கட்ரானிக்ஸ் பயிற்சிக்கு ரூ.10030 வசூலிக்கப் படுகிறது. பயிற்சிக்காலம் 2 மாதங்கள். தினமும் 6 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும். இந்த பயிற்சிகளில் சேர விரும்பும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் மத்திய அரசின் விதிமுறைகளின்படி பதிவுக் கட்டணம் ரூ.2000-ம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள், பள்ளிக் கல்வி சான்றிதழ்கள், கல்லூரி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஆதார் கார்டு மற்றும் மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கிண்டி சி.ஐ.டி.டி. அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இதுபற்றிய விவரங்களை, சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் டூல் டிசைன், எம்.எஸ்.எம்.இ.-டி.ஐ. வளாகம், 65/1, ஜி.எஸ்.டி. சாலை, கிண்டி, சென்னை-600 032 என்ற முகவரியில் கேட்டுப் பெறலாம். 044-22500366 என்ற தொலைபேசி எண்ணிலும் விவரங்கள் பெறலாம்.


Next Story