அருணாசலேஸ்வரர் கோவில் தங்கத்தேரில் சரிந்து விழுந்த மேல்பீடத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு


அருணாசலேஸ்வரர் கோவில் தங்கத்தேரில் சரிந்து விழுந்த மேல்பீடத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 23 April 2019 4:45 AM IST (Updated: 22 April 2019 10:40 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்கத்தேரில் சரிந்து விழுந்த மேல் பீடத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதனை அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவி லில் தங்கத்தேர் உள்ளது. இந்த தங்கத்தேர் பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை மற்றும் விசேஷ நாட்கள் இழுக்கப்படும். இந்த தேரை நேர்த்திக்கடனாக இழுப்பதற்கு கோவிலில் நிர்வாகத்தில் ரூ.1,500 செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இக்கோவிலில் உள்ள தங்கத்தேர் பழுதின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இழுக்கப்படாமல் இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பில் தங்கத்தேர் புனரமைக்கப்பட்டு கோவிலில் உள்ள 3-ம் பிரகாரத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சுமார் 9 மணியளவில் அருணாசலேஸ் வரர் சன்னதி முன்பு இருந்து தங்கத்தேர் இழுக்கப்பட்டது. சம்பந்த விநாயகர் சன்னதி அருகில் செல்லும் போது தங்கத்தேரின் விமானம் உள்ள மேல்பீடம் சரிந்து விழுந்தது. இதில் ஒருவர் மீது மேல் பீடம் விழுந்ததால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து தங்கத்தேரை பிரகாரம் சுற்றி இழுத்து சென்று நிலையில் நிறுத்தினர்.

தங்கத் தேரில் சரிந்து விழுந்த மேல் பீடம் சீரமைக்கும் பணி உடனடியாக தொடங்கியது. அதன்படி பணியாளர்கள் தங்கத்தேரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின் றனர்.

இந்த நிலையில் நேற்று இந்து அறநிலையத்துறையை சேர்ந்த நகை மதிப்பீட்டு அலுவலர் குமார், விழுப்புரம் மண்டல துணை ஆணையர் சுப்பிர மணியன் ஆகியோர் நேரில் வந்து தங்கத்தேரை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கோவில் இணை ஆணையர் ஞானசேகர் உடனிருந்தனர்.

Next Story