மாவட்ட செய்திகள்

கோவில் கும்பாபிஷேகத்தில் ஐஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி-மயக்கம் மருத்துவமனையில் அனுமதி + "||" + More than 100 children and young people who have eaten ice at Kumbabhishekam

கோவில் கும்பாபிஷேகத்தில் ஐஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி-மயக்கம் மருத்துவமனையில் அனுமதி

கோவில் கும்பாபிஷேகத்தில் ஐஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி-மயக்கம் மருத்துவமனையில் அனுமதி
திருவெண்காடு அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் ஐஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவெண்காடு,

நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே வானகிரி கிராமம் மீனவர் தெருவில் ரேணுகாதேவி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஐஸ் விற்பனை செய்தனர்.


தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் ஐஸ் வாங்கி சாப்பிட்டனர். ஐஸ் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை தூக்கிக்கொண்டு சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஒரே நேரத்தில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டதால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதில் வானகிரி கிராமத்தை சேர்ந்த ரஞ்சனி(12), விவேக்(3), மித்ரன்(3), கவிதா(5), நித்தியஸ்ரீ(4), கீழமூவர்க்கரையை சேர்ந்த தர்ஷன்(8), பூம்புகாரை சேர்ந்த கனிஷ்கா(6), பவித்ரன்(4), வெள்ளக்கோவில் கிராமத்தை சேர்ந்த சர்மிளா(5) உள்ளிட்ட 22 பேருக்கு சீர்காழி அரசு தலைமை மருத்துவர் டாக்டர் தேவலதா தலைமையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மீதி உள்ள 85-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் வானகிரி பகுதியில் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பூம்புகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரிகள், காலாவதியான ஐஸ்சை விற்றனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.600 கோடி ஊழல் குற்றவாளியான திரிபுரா முன்னாள் மந்திரி மருத்துவமனையில் அனுமதி
ரூ.600 கோடி ஊழல் வழக்கில் குற்றவாளியான திரிபுரா முன்னாள் மந்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
2. தமிழக அரசின் அனுமதி தேவை இல்லை: மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குங்கள் - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கடிதம்
மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்றும், எனவே இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.
3. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெயிண்டர் சாவு - போலீசார் விசாரணை
கத்திக்குத்து காயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெயிண்டர் இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. தூதரக அளவிலான சந்திப்புக்கு பாகிஸ்தான் வழங்கிய அனுமதியை இந்தியா ஏற்றது
குல்பூஷண் ஜாதவுடனான தூதரக அளவிலான சந்திப்புக்கு பாகிஸ்தான் வழங்கிய அனுமதியை இந்தியா ஏற்றது.
5. டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி: அருண் ஜெட்லி உடல்நிலையை வெங்கையா நாயுடு விசாரித்தார்
டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து வெங்கையா நாயுடு நலம் விசாரித்தார்.