மதுகுடிப்பதை தாயார் கண்டித்ததால் மனவேதனை: விஷம் குடித்து தச்சுதொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை


மதுகுடிப்பதை தாயார் கண்டித்ததால் மனவேதனை: விஷம் குடித்து தச்சுதொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 April 2019 3:45 AM IST (Updated: 23 April 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

மதுகுடிப்பதை தாயார் கண்டித்ததால் மனவேதனை அடைந்த தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள கோச குளம் தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் ஆனந்தராஜ்(வயது30). தச்சு தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஆனந்தராஜ் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது அவருடைய தாயார் திலகம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆனந்தராஜ் மதுபானத்தில் விஷத்தை கலந்து குடித்துள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, அங்கிருந்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story