இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முதன்மை கல்வி அதிகாரி தகவல்


இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முதன்மை கல்வி அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 23 April 2019 3:15 AM IST (Updated: 23 April 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி, 


தனியார் சுயநிதிப்பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிந்தவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 2019-20-ம் கல்வியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் (மெட்ரிக், மழலையர், தொடக்கப்பள்ளி) நுழைவு நிலை எல்.கே.ஜி. வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 3,085 மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

http://rte.tnsc-h-o-ols.gov.in/tam-i-l-n-adu என்கிற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அதற்கான குறுந்தகவல் பெற்றோரின் செல்போன் எண்ணிற்கு அளிக்கப்படும். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களிலும் எந்தவித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

அதிக விண்ணப்பங்கள் பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கள் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.

நேற்று முதல் அடுத்த மாதம் (மே) 18-ந் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். எனவே, சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் சேரும் வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story