காந்தி அமைதி பரிசு பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வேண்டுகோள்


காந்தி அமைதி பரிசு பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 23 April 2019 4:00 AM IST (Updated: 23 April 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

காந்தி அமைதி பரிசு பெற விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்,

மகாத்மாகாந்தியின் 125-வது பிறந்தநாளை கொண்டாடி சிறப்பிக்கும் வகையில் 2019-ம் ஆண்டிற்கு காந்தி அமைதி பரிசு வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பரிசு இந்தியாவின் தலைசிறந்த சமுதாய, பொருளாதார மற்றும் அரசியலில் அகிம்சை வழியில் செயல்பட்டு நீதியை நிலைநாட்டி பெருமை சேர்த்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த பரிசுகளுக்கு பிரதமர் தலைமையில் சிறந்த வல்லுனர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பரிசு தனிநபர்களுக்கு அல்லது குழுமம் அல்லது நிறுவனங்களில் தொண்டாற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது. நாட்டின் சிறுபான்மை இனத்தனவரின் சமுதாயம் மற்றும் மேன்மைக்கு பணியாற்றிய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இதற்கு தகுதியானவர்கள். சமுதாயம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மேன்மைக்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட எழுத்து ஆற்றலின் மூலம் சமுதாய வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் தகுதியானவர்கள் ஆவர்.

இந்த பரிசுத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரி www.sdat.tn.gov.in மற்றும் இந்திய அரசின் இணைய தளமுகவரி www.in-d-i-a-cu-ltu-re.nic.in. -ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்கள் வருகிற 30-ந்தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தஞ்சை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு 04362-235633 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Next Story