வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு பாலிடெக்னிக்கில் கலெக்டர் அருண் ஆய்வு


வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு பாலிடெக்னிக்கில் கலெக்டர் அருண் ஆய்வு
x
தினத்தந்தி 22 April 2019 10:30 PM GMT (Updated: 22 April 2019 7:54 PM GMT)

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக்கில் கலெக்டர் அருண் ஆய்வு நடத்தினார்.

புதுச்சேரி,

புதுவை எம்.பி. தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18–ந்தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால்நேரு அரசு பாலிடெக்னிக், அரசு பெண்கள் பாலிடெக்னிக்கில் வைக்கப்பட்டுள்ளன.

புதுவை பிராந்தியத்தில் உள்ள 23 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ளூர் போலீசார், துணை ராணுவப்படையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பகுதியில் பெண் தாசில்தார் ஒருவர் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் புதுவையில் நேற்று புதுவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் ஆய்வு நடத்தினார்.

பாதுகாப்பு அறைக்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். உரிய அனுமதியின்றி யார் உள்ளே வந்தாலும் அவர்களை அனுமதிக்கக்கூடாது என்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு அறிவுரையும் வழங்கினார்.

இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் மே மாதம் 23–ந்தேதி பாதுகாப்பு அறையிலிருந்து எடுக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகிறது.


Next Story