பந்தயம் கட்டி அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய 6 பேர் பிடிபட்டனர் போலீசார் நடவடிக்கை
பந்தயம் கட்டி அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் ஓட்டிய இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பந்தயம் கட்டி சில இளைஞர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் செல்வதாக போக்குவரத்து போலீசாருக்கு புகார் வந்தது.
இதன்பேரில், ராயப்பேட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில், போலீசார் விரைந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக மோட்டார் சைக்கிள்களில் வந்த கொரட்டூரைச் சேர்ந்த இனையதுல்லா (வயது 25), பாபுசெய்யது (21), அரவிந்தன் (22), கிரீஷ்குமார் (19), பழையவண்ணார பேட்டையை சேர்ந்த உபயதுல்லா (26), ராயபுரத்தைச் சேர்ந்த யாசின் (40), ஆகிய 6 பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
அவர்களது மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள்மீது, ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச்சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் இறைச்சிக்கடையில் வேலை செய்பவர்கள் ஆவார்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Related Tags :
Next Story